சீன யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு உறுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு லண்டனில் உள்ள ஹெண்டன் கிரவுன் நீதிமன்றம் 11 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்ற 38 வயதுடைய குறித்த நபர் லண்டனில் ஸ்டுடியோ ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.
குறித்த நிலையத்திற்கு புகைப்படம் எடுக்க வந்த சீனப் பெண்ணுக்கு மதுபானம் கொடுத்து குறித்த நபர் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சமத்துவம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி அன்று கிரவுன் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.