அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராக்க கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவித்துக் கொள்ளக்கூடாது என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வரிக்கொள்கை மற்றும் ஐஆகு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது வகையில் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நிகழ்வு யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வரியை சரியான வழிமுறையில் செலுத்துவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் வேண்டும்
நாட்டின் நலன்கருதியதான இந்த நோக்கத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இங்கே மிக முக்கியமான ஒரு விடயமாக இருக்கின்றது.
தற்போது அதிகமானோர் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளி நடுகளில் இருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றவர்களுக்கு தெரியும் உலக நாடுகளில் எவ்விதமாக இந்த வரி அறவீடுசெய்யப்படுகின்றது என்று.
அதுமட்டுமல்லாது குறித்த வரி அந்நாடுகளின் வருமானத்தில் எத்தகைய பெரும் பகுதியாக காணப்படுகின்றது என்றும் உணர்ந்துகொள்ள முடியும்.
எனவே அந்த வகையிலே எங்களுடைய நாட்டிலே வரி அறவீடு தொடரில் மிக இலகுவான காரியமாக அல்லது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.
பலர் அந்த வரியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் நடைமுறைகளை கையாளுகின்றனர்.
எனவே நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியிலும் இந்த நாட்டிலே பல தேவைகளை நாங்கள் பெற்றுக் கொள்கின்றவர்கள் என்ற ரீதியிலும் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
அதனால் இந்த வரிக் கொள்கையில் நாங்கள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காளர்களாக வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.