பிரித்தானியாவில் அண்மைக்காலமாக வீடுகளை வாடகைக்கு எடுப்பதென்பது அங்கு வாழும் மக்கள் மத்தியில் மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருகின்றது.
குறிப்பாக வாடகைக்காக வீடுகளை நேரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு சராசரியாக 6 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து 18 முதல் 20 ஆக உள்ளதாக ரைட்மூவ் என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும், பிரித்தானியாவின் வடமேற்கு பகுதிகளில் 30-ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில வருடங்களாகவே பிரித்தானியாவில் வங்கிகளில் வீட்டு கடன் வட்டி உயர்வடைந்து வருவதாகவும் . இதனால் மக்கள் வங்கி கடன் பெற்று வீடு வாங்கும் திட்டத்தை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் காரணங்களால் வாடகைக்கு வீடு தேடுவோர் அதிகமாகவும், வீடுகள் குறைவாகவும் உள்ள ஒரு முரண்பட்ட சூழ்நிலை உருவாகி வாடகை வீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனால் குடும்பங்களில் பெரும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படுவதுமட்டுமன்றி மன அழுத்தமும் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.