மாகாண சபை மற்றும் பிரதேச சபை இவை இரண்டினையும் வைத்துக் கொண்டு 13 குறித்து பேசுவது தான் யதார்த்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் முதலில் கலந்துரையாடுமாறும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் 13வது திருத்தம் பற்றி பேசுவதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கட்சி என்ற முறையில் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார் எனவும் நாமல் ராஜபக் குறிப்பிட்டுள்ளார்.