சுதந்திர இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்றிவருகிறோம்.
நாடென்ற வகையில் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற முடிந்துள்ளது. தற்போதைய வெளிவிவகாரக் கொள்கையை இலங்கை வரலாற்றில் சிறந்த யுகமாகக் கூறலாம்.
இதன் காரணமாக சர்வதேச சமூகத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்படுவதுடன் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தவும் வாய்ப்பாக உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையினால் எமது நாடு இன்று அனைத்து நாடுகளினதும் ஆதரவைப் பெற முடிந்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டு உறவுகளின் சிறந்த சகாப்தம் என தற்போதைய வெளியுறவுக் கொள்கையை கூறலாம்.
இதன் காரணமாக அனைத்து சர்வதேச நாடுகளுடனும் நெருக்கமாக செயற்படுவதுடன் நாட்டிற்கு பல அபிவிருத்தி நன்மைகளை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக உள்ளது” என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.