தனது வீட்டின் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழில் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் என்ற 67 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் முதியவரின் உடற் கூற்று பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.