மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டின் ஜனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்பதுடன் இது போன்ற ஜனாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை இராணுவத்தினர் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும நைஜர் ஜனாதிபதி Mohamed Bazoum யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நைஜர் ஜனாதிபதி Mohamed Bazoum ; சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.