கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி யாழ் மாவட்டத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்படுவதோடு, வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை இடம்பெற்று வருகின்ற போதும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதால் நெடுந்தூர பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.