அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே இவ்வாறு
பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.