ஆபத்தில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்புவதாகக் கூறி நீர்க் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் மீது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பது மக்களை ஒடுக்கும் தன்னிச்சையான செயலாகும். மக்களின் தோள்களில் சுமையை ஏற்றி எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் ?” இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் கிட்டிய நாட்களில் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் போது மக்கள் ஆதரவற்றுப்போவர்,அரசாங்கம் மக்கள் மீது எந்த உணர்வும் இல்லாமல் செயற்படுகின்றது. அத்துடன் மக்களது வாழும் உரிமையும் இதனால் மீறப்படுகின்றது
எனவே அதிகரித்துள்ள நீர் கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்க வேண்டும் ” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.