இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (வெள்ளிக்கிழமை) ஈரான் செல்லள்ளார்.
குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தல் மற்றும் பொருளாதார விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.
மேலும் ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசியை சந்திக்கவுள்ளதுடன், ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அந்நாட்டின் உயர் அரச அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது