ரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் நேற்றிரவு மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் குறித்த பகுதியில் உக்ரேனால் மேற்கொள்ளப்பட்ட 04 தாக்குதல் இதுவென ரஷ்யா தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதல் காரணமாக துறைமுகத்திற்கு பாதுகாப்பு வழங்கிவரும் ரஷ்ய யுத்த கப்பல்கள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமை இலக்கு வைத்தே உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், துறைமுகத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.