மகாவலி வலயங்களில் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான நீரை அதிகாரிகள் விடுவிக்கத் தவறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அதன் தலையீட்டைக் கோரவுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் போதியளவு நீர் உள்ள போதிலும் பயிர்ச்செய்கைக்குத் தேவையான நீர் விடுவிக்கப்படுவதில்லை என கூட்டமைப்பின் அழைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக மகாவலி வலயங்களில் உள்ள விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, சமனலவெல நீர்த்தேக்கத்திலிருந்து நெற்பயிர்களுக்கு நீரை விடுவிப்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கடந்த 20 வருடங்களில் மகாவலி வலயங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வறட்சியினால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.