லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவுசெய்தது.
கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டிம் செய்பர்ட் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் செவோன் டேனியல் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில், நஷிம் ஷா, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக பாபர் அசாம் 104 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் டப்ரைஸ் சம்ஸி 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.