ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வீதிகளின் மோசமான நிலை, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்மையினால் ஆப்கானிஸ்தானின் அதிக விபத்துக்கள் இடம்பெறுகின்றன.
மேலும், கடந்த மூன்று மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.