லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 18ஆவது லீக் போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள இப்போட்டியில், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் பி-லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்னமும் சற்று நேரத்தில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் : பத்தும் நிசாங்க, பாபர் அசாம், நுவனிந்து பெர்னாண்டோ, இப்திகார் அஹமட், லஹிரு உதாரா, நிபுன் தனஞ்சய, மொஹமட் நவாஸ், சாமிக கருணாரத்ன, ஜெஃப்ரி வான்டர்சே, நசீம் ஷா, மதீஷ பத்திரன
பி-லவ் கண்டி : ஃபகார் சமான், மொஹமட் ஹரிஸ், சஹான் ஆராச்சிகே, ஏஞ்சலோ மேத்யூஸ், அஷேன் பண்டார, ஆசிப் அலி, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க, இசுரு உதான, மொஹமட் ஹஸ்னைன், நுவான் பிரதீப்