லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு குறித்த அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் அடுத்த பருவகாலத்திற்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நடவடிக்கைகள் நாளை மறுதினம் (மே 08) ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி:
மே மாதம் 08-ஆம் திகதி முதல் மே 18-ஆம் திகதி வரை வெளிநாட்டு வீரர்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
ஆர்வமுள்ள வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.srilankacricket.lk ஊடாக இணையவழியில் (Online) விண்ணப்பிக்கலாம்.
இம்முறை தொடரை நாட்டின் கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானம், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம், கண்டி பல்லேகல சர்வதேச மைதானம், தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானம்.
ஆகிய நான்கு பிரதான மைதானங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நட்சத்திர வீரர்களை ஈர்க்கும் வகையில் இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

















