சமரி அதப்பத்துவுக்கு பின்னர் , மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த ஒரே இலங்கை வீராங்கனை என்ற பெருமையை இமேஷா துலானி இன்று (31) பெற்றார்.
தம்புள்ளையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
பாகிஸ்தான் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கைத் துரத்திய இலங்கை, போட்டியின் 19வது ஓவரில் அந்த இலக்கை எட்டியது.
இமேஷா, வெறும் 64 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் குவித்து, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தார்.
அவரது ஆட்டத்தில் 17 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
இதேவேளை, சமரி அதப்பத்து இலங்கைக்காக மூன்று டி20 சர்வதேச சதங்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















