ஸ்பானிய சாம்பியனான பார்சிலோனா அணி, புதன்கிழமை (09) இரவு ஃபெயினூர்டுக்கு (Feyenoord) எதிரான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது, வெறும் 19 வயது 58 நாட்களே ஆன லாமின் யமால் அந்த கழகத்தின் மிக இளம் வயது தலைவராகப் பொறுப்பேற்று வரலாறு படைத்தார்.
வழக்கமான தலைவரான ரஃபின்ஹா மாற்றப்பட்டபோது, 71 ஆவது நிமிடத்தில் அந்த இளம் வீரர் தலைவராக பெறுப்புக்களை (armband) ஏற்றுக்கொண்டார்.
2010-ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா டெல் ரே (Copa del Rey) போட்டி ஒன்றில் 20 வயதில் பார்சிலோனா அணிக்குத் தலைமை தாங்கிய போஜன் கிர்கிச் (Bojan Krkic) வசம் இருந்த முந்தைய சாதனையை, யமலின் இந்த மைல்கல் சாதனை முறியடித்தது.
பார்சிலோனா அணிக்காகத் தொடர்ந்து கூடுதல் பொறுப்புகளை ஏற்று வரும் யமலின் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு வாழ்க்கையில், இந்த நிகழ்வு மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
















