லங்கா சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதோச நிறுவனம் 9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக 400 கிராம் உள்ளுர் பால் மா பாக்கெட்டின் விலை 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 970 ரூபாவாகும்.
1 கிலோ சோயாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 625 ரூபாவாகும்.
ஆத்துடன்; நெத்தலியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1160 ரூபாவாகவும் 1 கிலோ பாஸ்மதி அரிசியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 675 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் புதிய விலை 350 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் புதிய விலை 325 ரூபாவாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் கொண்டைக்கடலையை 555 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் பூண்டு 630 ரூபாவிற்கும் விற்பனை செய்ய சதோச நிறுவனம் தீர்மானித்துள்ளது
ஒரு கிலோ சிவப்பு கச்சா அரிசியின் புதிய விலை 147 ரூபாவாக உள்ளதுடன், அதன் விலையை 2 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்தார். இதற்கமைய லின்னன் மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் கெலவல்லா 1100 ரூபாவிற்கும், பலயா 700 ரூபாவிற்கும் கனவா 700 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.