லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிப் போட்டி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, தம்புள்ளை அவுரா அணிக்கு 147 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு ஆர்-பிரேமதாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லசித் கிருஸ்புள்ளே 80 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தம்புள்ளை அவுரா அணியின் பந்துவீச்சில், ஹெய்டன் கெர் 3 விக்கெட்டுகளையும் நூர் அஹமட் 2 விக்கெட்டுகளையும் பினுர பெனார்டோ, தனஞ்சய டி சில்வா மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இன்னமும் சற்று நேரத்தில் தம்புள்ளை அவுரா அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.