நாட்டில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 85 வீத மாணவர்களுக்கு எழுத்தறிவு குறைவாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் 85 வீதமான மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண் கணித அறிவு குறைந்தபட்ச நிலையிலேனும் எட்டவில்லை என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலைமையானது குழந்தைகளின் இடைநிலைக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டதனால், அல்லது இடைநிறுத்தப்பட்டமையினால் ஆரம்பப் பிரிவை சேர்ந்த 1.6 மில்லியன் மாணவர்கள் கல்வியை இழந்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சும் UNICEF நிறுவனமும் இணைந்து மாணவர்களுக்கு மூன்று வருடங்கள் தவறவிட்ட கல்விக் காலத்தை மீள வழங்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை 16 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பித்த போது, இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.