மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு தற்போது 23 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 100 மெகாவோட் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.