லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில், பி-லவ் கண்டி அணி, காலி டைடன்ஸ் அணிக்கு 158 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பி-லவ் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மொஹமட் ஹரிஸ் இரண்டாவது ஓவரிலும் 4 ஆவது ஓவரில் தனுக டபரேவும் 4.4 ஆவது ஓவரில் சஹான் ஆராச்சிகேவும் ஆட்டமிழக்க கண்டி அணி 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஹசரங்க மற்றும் தினேஷ் சந்திமாலின் சிறந்த இணைப்பாட்டம் அணிக்கு வலுசேர்க்க 13.2 ஓவரில் ஹசரங்க 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்த்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 105 ஆக இருந்தபோது தினேஷ் சந்திமாலும் 18.3 ஆவது ஓவரில் ஆசிப் அலியும் 19.4 ஆவது ஓவரில் ஏஞ்சலோ மேத்யூஸும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
கண்டி அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களையும் பெற்றுகு;கொண்டனர்.
காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், சொனால் தினுஷ மற்றும் லஹிர குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இன்னமும் சற்று நேரத்தில் காலி டைடன்ஸ் அணி, துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.