சமூக ஊடகங்களான டிக்டொக், டெலிகிராம் மற்றும் ஒன்லைன் சூதாட்ட இணையதளங்களுக்கு சோமாலிய அரசாங்கம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
ஒழுக்கமின்மையை பரப்பும் பயங்கரவாதிகள் மற்றும் சில குழுக்கள், சமூகத்தை தவறாக வழிநடத்துவதற்கு இத்தகைய தளங்கள் உதவியாக இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்னும் ஐந்து மாதங்களுக்குள் நாட்டின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் அல்-ஷபாப் போராளிக் குழுவை ஒடுக்கும் வகையில் சோமாலியா இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே ஓகஸ்ட் 24 ஆம் திகதிக்குள் இந்த தடையை இணைய சேவை வழங்குநர்கள் அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.