நீதிமன்றத்தையோ, நீதித்துறை அதிகாரத்தையோ அல்லது நிறுவனத்தையோ அவமதிக்கும் வகையிலான சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்று காலை நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகிய போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த சட்டமூலம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட ஐந்து தரப்பினரால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, இந்த சட்டமூலத்தில் உள்ள முரணான சரத்துக்களை நாடாளுமன்றத்தில் அல்லது பொது வாக்கெடுப்பு ஊடாக மட்டுமே நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எவ்வரியினும் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டால் சட்டமூலத்தில் உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.