நாட்டில் தட்டுப்பாட்டு நிலவிய 275,000 இன்சுலின் (Insulin) மருந்து பொதிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் மருந்து பொதிகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.