புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்துள்ளதாக போலியான செய்திகள் வலம்வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹென்றி ஒலோங்கா என்ற நபர் அவருடன் நடத்திய வாட்ஸ்அப் உரையாடலை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக் 1990 முதல் 2000 ஆம் வரை பிளவர் சகோதரர்கள் விளையாடிய காலத்தில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.
சிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட், 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4933 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹீத் ஸ்ட்ரீக், 455 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹீத் ஸ்ட்ரீக், பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
பங்களாதேஷ், சிம்பாப்வே சர்வதேச அணிகளுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
https://twitter.com/henryolonga/status/1694212344732357101?s=20