இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வெற்றிகரமான கலந்துரையாடல் தொடரில் பங்கேற்றார்.
இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி பிரதமர் லீ சியென் லூங்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடியிருந்தார்.
இரு தலைவர்களும் நீடித்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொருளாதார ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான வழிகள் தொடர்பாகவும் இதன்போது ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.