‘மதத்தின் பெயரால் சமூக ஒழுங்கை சீர்குலைப்பதற்கு தண்டனை வழங்கும் தெளிவற்ற விதி’ கிறிஸ்தவ மதத்தலைவர் அருட்தந்தை பார்க் குவாங்-ஷேவுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் சக ஊழியர்களால் பல மனித உரிமைகள் அமைப்புக்களுக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில், ஒகஸ்ட் முதல்வாரத்தில் குவாங்சி மாகாணத்தின் நான்னிங், ஷிசியாங்டாங் மாவட்டத்தில் உள்ள ஷிபு நகரில் நியூ லைஃப் கிறிஸ்தவ தலத்தின் அருட்தந்தை பார்க் குவாங்-ஷே கைது செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 27(2) இன் கீழ் சமூக ஒழுங்கை சீர்குலைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காகவும் தடைசெய்யப்பட்ட மதக் குழுக்களின் செயல்பாடுகளை தண்டிக்கும் குறித்த சட்டத்தின் பிரிவு 27(1) கீழும் கைது செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் குறித்த அருட்தந்தை 15 நாள் நிர்வாக தடுப்பின் முடிவில், கடுமையான அபராதம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளர். அவ்வாறு பணம் செலுத்தாதுவிட்டால், மேலும் 15 நாட்கள் காவலில் வைக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தையுவானின் சிட்டி ஆஃப் காட் சீர்திருத்த தேவாலயத்தின் அருட்தந்தை ஆன் யாங்குய் மற்றும் சக ஊழியர் ஜாங் செங்காவோ ஆகியோர் 2022இல் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு மீண்டும் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.