லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறுகின்றது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், தம்புள்ளை அவுரா அணியும் பி-லவ் கண்டி அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் தம்புள்ளை அவுரா அணிக்கு குசல் மெண்டிசும் பி-லவ் கண்டி அணிக்கு வனிந்து ஹசரங்கவும் தலைமை தாங்குகின்றனர்.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள தம்புள்ளை அவுரா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்னமும் சற்று நேரத்தில் தம்புள்ளை அவுரா அணி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
பி-லவ் கண்டி: மொஹமட் ஹரிஸ், தினேஷ் சண்டிமால், அஷேன் பண்டார, ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், சதுரங்க டி சில்வா, ஆசிப் அலி, லஹிரு மதுஷங்க, மொஹமட் ஹஸ்னைன், முஜீப் உர் ரஹ்மான், நுவான் பிரதீப்
தம்புள்ளை அவுரா: அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அலெக்ஸ் ரோஸ், ஹைடன் கெர், துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, நூர் அஹமட், பிரமோத் மதுஷன்