விவசாய அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மானாவாரிப் பகுதி ஆணையத்தின் தகவல்களின் படி, இந்தியாவின் நிகர விதைப்புப் பரப்பில் கிட்டத்தட்ட 140 மில்லியன் ஹெக்டேரில் 55சதவீதமானவை – முதன்மையாக மழையைச் சார்ந்துள்ளது.
நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் மானாவாரி விவசாயம் சுமார் 40சதவீதமான பங்கை வகிக்கிறது. அத்துடன் கால்நடைகளில் மூன்றிலிரண்டு பங்கு மற்றும் 40சதவீதமான மனித மக்கள்தொகைக்கும் அடிப்படையாக உள்ளது.
எனவே, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு இது ஒரு முக்கிய பங்களிப்பாக உள்ளதோடு 80சதவீதமான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளின் வாழ்வாதாரம் மழையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகாலாந்தில் உள்ள கிக்ருமா என்ற கிராமம் குறித்த விடயத்திற்கு முன்னோடியாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள பூர்வீக நீர்ப்பாசன முறை மற்றும் விவசாய நடைமுறை, ருசா அமைப்பு என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது,
இது ஒரு காலத்தால் பரிசோதிக்கப்பட்ட தனித்துவமான நீர் மேலாண்மை நடைமுறையாகும், இது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக நல்ல அறுவடைகளை அளித்து வருகிறது.
அழகிய கிராமமான கிக்ருமா நாகாலாந்தின் ஃபெக் மாவட்டத்தில் 1,643 மீட்டர் உயரத்தில்; மலைப் பகுதியில் அமைந்துள்ளது. நாகாலாந்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 150 மழை நாட்களுடன் 2,000 மில்லிமீற்றராக இருக்கும் அதேவேளையில், கிக்ருமா ஆண்டுதோறும் சுமார் 461.18 மில்லிமீற்றர் மழையைப் பெறுகிறது’ என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை-கேந்திரா பிஹெக்யான் நாகாலாந்தின் வேளாண்மைத் துறையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹன்னா க்ருஜியா அசங்லா பகிர்ந்து கொண்டார்.
கிராமத்தின் தெற்கு மற்றும் வடக்கே முறையே ஓடும் பருவகால ஆறுகள் அதன் நீர் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. இந்த வற்றாத நீர் பற்றாக்குறையை சமாளிக்க, கிராம மக்கள் ரூசா என்று உச்சரிக்கப்படும் தண்ணீரை உறிஞ்சி பாசனத்திற்கு பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.