பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரிட்டிஷ் விமான நிலையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் குறைந்தது 500 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை உடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய விமான போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டதால் வெளிநாடு செல்பவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ள போதிலும் குறிப்பிடத்தக்க தாமதங்கள் தொடர்வதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மேலும் நேர அட்டவணை சீர்குலைந்துள்ள நிலையில் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.