பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில், அண்மையில் இடம்பெற்ற கலாசார திருவிழாவில் பங்கேற்ற 85 பேரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இத்திருவிழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் பங்குபற்றிய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஓகஸ்ட் மாதத்தின் இறுதிவாரத்தில் ‘நொட்டிங் ஹில்‘(Notting Hill)என்ற கலாசார திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
எனினும் இத்திருவிழாவானது கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.