வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் அமெரிக்கா கைகோர்க்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இவ்வியடம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் வர்த்தகத்துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக சீனா சென்றுள்ளார்.
இதன்போது வணிகம் மற்றும் சுற்றுலா துறையில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, பொருளாதார உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது குறித்து சீன வர்த்தக துறை அமைச்சருடன் அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஜினா ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான்,உக்ரேன் -ரஷ்யப்போர் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கினால் இரு நாடுகளின் வர்த்தகமும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இதனைச் சரிசெய்யும் வகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.