அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.
இதன் காரணமாக புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புளோரிடாலில் மின் இணைப்புக்களும் முற்றிலும் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.