வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் வாகனங்களை நாட்டிற்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
யட்டியந்தோட்டை மலல்பொல பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2015 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ததன் பின்னர் அதற்கு பதிலாக அதிகமான வாகனங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 5 வருடங்களுக்கு பின்னரே 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதமே வாகனம் கொண்டு வருவதற்கான தடை விதிக்கப்பட்டது.
அவ்வாறு தடை விதிக்கப்பட்ட பின்னரும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் அத்தியவசிய வாகனங்களுக்கும் மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டது.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் விசேட தேவைகளுக்காக மாத்திரம் 6,900 வாகனங்களை நா கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 2000 வாகனங்கள் பொலிஸ் திணைக்களத்திற்கு தேவையான முட்ச்சக்கர வண்டிகள்.
அத்துடன் 1000 பொலிஸ் ஜீப் வண்டிகள். அம்புயுலன்ஸ் வண்டிகள் அரச நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்களே கொண்டு வரப்பட்டன அவை தவிர வேறு வாகனங்களுக்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை.
தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் வாகனங்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டுள்ள காலப்பகுதிக்கும் இந்த வாகனங்கள் கொண்டு வரப்பட்ட காலப்பகுதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இந்த விடயம் குறித்த நீதிமன்றத்தில் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளோம். அதேபோன்று இறைவரி திணைக்களத்திலும் தகவல் அறிக்கை ஒன்றை கோரி இருக்கின்றோம்.
தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.