சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று இடம்பெற்றன.
இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று இடம்பெற்றுள்ள வாக்குப்பதிவிற்கு இணங்க தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக சிங்கப்பூர் தகவல்கள் தெரிவித்துள்ளன.