இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டைத் தவிர்க்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் திட்டமிட்டிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் டெல்லியில் நடைபெறும் உச்சிமாநாட்டில் அந்நாட்டின் தூதுக்குழுவை சீன பிரதமர் லீ கியாங் வழிநடத்துவார் என பெய்ஜிங் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இறுதியாக சந்தித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு வொஷிங்டனில் இருந்து பேச்சுவார்த்தைக்கு நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அமெரிக்க-சீனா உறவுகள் பதட்டமாகவே உள்ளன.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சீனாவின் வெளிவிவகார அமைச்சு, டெல்லியில் இடம்பெறும் உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதியின் வருகையை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.