ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின், சுப்பர்-04 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில், 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியக் கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றa இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணியால், 49.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 53 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், துனித் வெல்லாலேகே 5 விக்கெட்டுகளையும் சரித் அசலங்க 4 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 214 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியால், 41.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி, 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியின் போட்டி துனித் வெல்லாலகே சிறந்த துடுப்பாட்டம் மற்றும் சிறந்த பந்து வீச்சினை பதிவுசெய்தார்.