லிபியா புயலை அடுத்து அங்கு உயிரிழவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 8 ஆம் திகதி மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.