ஆசியக் கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் ஆறாவது லீக் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா அணிக்கெதிராக பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்ட எட்டாவது வெற்றி இதுவாகும்.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஒட்டங்களாக, சகிப் அல் ஹசன் 80 ஓட்டங்களையும் டவ்ஹித் ஹிரிதோய் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணியால், 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆறு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் 121 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், முஷ்டபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் டன்சிம் ஹசன் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.