வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிம் ஜாங் உன் உன்னின் இந்த பயணத்தினை தென்கொரியா கடுமையாக விமர்சித்துள்ளதோடு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம் குறித்து வடகொரியா பேச்சுவார்த்தை நடத்தியது ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் வடகொரியா-ரஷ்யா இடையே இந்த இராணுவ ஒத்துழைப்பை கட்டுப்படுத்த மற்ற உலக நாடுகளுக்கு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது.