பெல்ஜியத்தில் இருந்து நாட்டிற்கு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 16.4 மில்லியன் பெறுமதியான ஹாஷிஸ் போதைப்பொருள் இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது.
கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் இருந்து சுமார் 1.098 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அந்த பை வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்டதாகும். அவை தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.