2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி அடாவருக்கான உலகக்கிண்ண டி20 தொடருக்காக அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத்தை முதன்முறையாக நடத்தும் அமெரிக்கா, டல்லாஸில் கிராண்ட் ப்ரேரியிலும் புளோரிடாவில் ப்ரோவர்ட் கவுண்டியிலும் நியூயோர்க் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து இந்த தொடரை நடத்துவதாக அறிவித்தன.
இதன் மூலம் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வத்தை பொதுமக்கள் மத்தியில் விதைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியூயோர்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள ஐசன்ஹோவர் பூங்காவில் 34,000 இருக்கைகள் கொண்ட மாடுலர் ஸ்டேடியத்தை உருவாக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது
இதற்கு அடுத்த மாதம் அனுமதியை வழங்குவது குறித்து நியூயோர்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள விளையாட்டு முடிவெடுக்கவுள்ளதாகும் ஐசிசி தெரிவித்துள்ளது.