திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவேந்தல் வாகனத்தை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்களை ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.