மேஜர் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியான கெம்பேவன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் கிரஸ் அசூல் அணியை வீழ்த்தி இண்டர் மயாமி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
இப்பருவகாலத்திற்கான கெம்பேவன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் புடைசூழ அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள இண்டர் மாயாமியின் கோட்டையான நு அரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது.
ரசிகர்கள் ஆர்ப்பரிக்க 2026ம் ஆண்டிற்கான சம்பியன் யார் என்பதை தெரிந்துகொள்ள இரு கழகங்களில் ரசிகர்களும் மைதானத்தில் குழுமியிருந்தனர்.
இந்நிலையில் போட்டி தொடங்கியதிலிருந்து கிரஸ் அசூல் அணி வீரர்களின் ஆதிக்கமே தொடர்ந்தது.
முதல் 23 நிமிடங்கள் வரை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போட்டியில் இண்டர் மாயாமி அணி தனது கட்டுப்பாட்டிற்குள் பந்தை பெற்றுக்கொண்ட 24வது நிமிடத்தில் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி சிறப்பான கோலினை பதிவு செய்து இண்டர் மயாமி அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார்.
இது இண்டர் மாயாமி அணி சார்பில் அவர் அடித்த 100வது கோலாக மாற்றம் பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்க கிரஸ் அசூல் அணி மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைய முதல் பாதியில் இண்டர் மயாமி அணி முன்னிலைப்பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் இரு அணிகளும் மாறி மாறி பல முயற்சிகளை மேற்கொண்டன,ஒரு புறம் இண்டர் மயாமி அணியும் விடாமல் முன்னிலைப்பெற முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அது கைகூடாமல் நேரம் சென்றுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் போட்டியின் 81வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கஸ்மீரோ தனது ஸ்டைலில் இண்டர் மயாமி அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.
இதனால் 2-0 என அவ்வணி முன்னிலைப்பெற்ற நிலையில் செய்வதறியாது முழித்தது கிரஸ் அசூல் அணி இருந்தும் இறுதிவரை அவ்வணியால் கோல் எதனையும் பதிவு செய்ய முடியாமல் போக 2026ம் ஆண்டிற்கான கெம்பேவன்ஸ் சம்பியனாக மகுடம் சூடியது இண்டர் மாயாமி அணி.














