வீடுகள் சேதமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுமானால் குறித்த தாக்குதலில் சேதமடைந்த தனியார் பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கரத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுமார் 50 தனியார் பஸ்கள் சாம்பலாகியுள்ளன. அதேபோல் சுமார் 50 பஸ்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
காப்புறுதி ஊடாக கிடைக்கும் நிதி போதுமானது அல்ல. வீடுகள் சேதமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பஸ் உரிமையாளர்கள் ஒரு பகுதியினருக்கு கூட இது கிடைக்கவில்லை.
பஸ் ஒன்றுக்கு 10 மில்லியன் பெறுமதியில் 50 பஸ்களுக்கு 500 மில்லியன் ரூபாவே செலவாகும். இது மிகப்பெரிய தொகையும் அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.