ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது பிரித்தானியா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து பல்கேரிய பிரஜைகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பாதகமான நோக்கத்திற்காக எதிரிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனுள்ள தகவல்களை சேகரிக்க சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2020 ஓகஸ்ட் மற்றும் 2023 பெப்ரவரிக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுக்கள் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
41, 45, 31 வயதுடைய ஆண்களும் 29, மற்றும் 31 வயதுடைய பெண்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.