உலகிலேயே மிகப்பெரிய எலியொன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நியூயோர்கில் எலிகளின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு உள்ள எலிகளின் எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளதாகவும், அதாவது அந்நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இணையாக ஐந்து எலிகள் உள்ளன எனவும் ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் எலிகளின் பருமன் அதிகரித்து வருவதால், வீடுகளுக்குள் நுழைந்து, தங்களுக்கான உணவைத் தேடும் தைரியமும் எலிகள் மத்தியில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாது அங்கு காணப்படும் எலிகள் அளவில் மிகப் பெரியதாகவும், பயமுறுத்தும் தோற்றத்தினைக் கொண்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் நியூயோர்க் நகரில் பிடிக்கப்பட்டுள்ள எலியொன்று அமெரிக்க மக்களை அதிர்சியடைய வைத்துள்ளதோடு, இணையத்தையும் கலக்கி வருகின்றது.
சுமார் 4 அடி உயரம் கொண்ட குறித்த எலியானது உலகிலேயே பிடிக்கப் பட்ட மிகப் பெரிய எலி எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.